ஹீரோ’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ஹீரோ. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜுன், இவானா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
கடந்த மாதம் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு தற்போது படத்தின் முதல் பாடலை வெளியிட தயாராகி வருகிறது. அதன்படி படத்தில் இடம்பெற்றுள்ள மால்டோ கித்தாப்புலே பாடலை வரும் 7-ம் தேதி வெளியிடுகிறது படக்குழு. படத்தின் முதல் வரியைப் பார்த்து இதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave A Comment
You must be logged in to post a comment.