பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‛சீமராஜா’ என பெயரிடப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளான இன்று படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.

 

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து தனக்கென தன ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இன்று(பிப்.,17) பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று, ஆர்.டி ராஜா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ‛சீமராஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ‛பர்ஸ்ட் லுக்’கும் வெளியிடப்பட்டது.

இமான் இசையில், சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடிப்பில் வெளிவரும் இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.