கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டாம் பாக திரைப்படங்கள் அதிகம் உருவாகி வருகிறது. ரஜினியின் ‘2.0‘, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2‘, உள்பட விஐபி 2, ஜெய்ஹிந்த் 2, டார்லிங் 2, ஜித்தன் 2, கோ 2, மணல் கயிறு 2, புலன்விசாரணை 2, சென்னையில் ஓர் நாள் 2 ,மாரி 2, சண்டக்கோழி 2, உறியடி 2, தில்லுக்கு துட்டு 2 என சமீபத்தில் வெளியான இரண்டாம் பாக படங்கள் அதிகம்

c v kumar

இந்த நிலையில் தற்போது ‘இன்று நேற்று நாளை 2’ திரைப்படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி குமார், தான் தயாரித்த முந்தைய ஒருசில படங்களின் இரண்டாம் பாகங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக விஜய்சேதுபதியின் ‘சூது கவ்வும்’, விஷ்ணு விஷாலின் ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் அசோக் செல்வனின் ‘தெகிடி’ ஆகிய திரைப்படங்களை இரண்டாம் பாகமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படங்கள் இரண்டாம் பாகங்கள் தயாரிக்கப்பட்டால் முதல் பாகத்தில் பணிபுரிந்த நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்களே பணிபுரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.