விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இந்த வார சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். 

அப்போது சிவகார்த்திகேயன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மேடைக்கு வந்தபோது, செந்தில்-ராஜலட்சுமி ஜோடி பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடி முடித்ததும், ராஜலட்சுமியைப்பார்த்து வீர தமிழச்சி என்று அவருக்கு ஒரு பட்டத்தை கொடுத்தார் சிவகார்த்திகேயன். அதைக்கேட்டு அவர் நெகிழ்ந்து போனார்.

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஒரு பாடலை பாடகர் செந்தில் பாட, உருகிப்போன சிவகார்த்திகேயன், அவரை மனதார பாராட்டினார்.