‘பேட்ட‘ படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்‘. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க. அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தளபதிக்கு பிறகு இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்துள்ளார்.

இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பாலான படங்களில் ஓபனிங் பாடல்களை பாடியவர் எஸ்பி பாலசுப்ரமணியம். பேட்ட படத்திலும் மரண மாஸ் பாடலை ரஜினிகாந்துக்காக பாடியிருப்பார் எஸ்பிபி.
இந்நிலையில் தர்பார் படத்தில் ஓபனிங் சாங் பாடியது குறித்து அவர் பேசினார். அந்த காட்சியில் என்னை ஏன் பாராட்டுறீங்க. போலீஸா இருக்குறதுனால உங்களுக்கு கடைமையை செய்யறேன். இந்த யூனிபார்ம கழட்டிட்டா நான் உங்களில் ஒருத்தன். பாடல் நன்றாக வந்திருக்கிறது. அனிருத் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று தெரிவித்தார்.
Leave A Comment
You must be logged in to post a comment.