நடிகர் சூர்யா செய்த சிறப்பான செயல்!
நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் ஓடிடி தளத்தில் வெளியாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதே. அவரின் இந்த செயலை சிலர் கடுமையாக எதிர்த்து, தரக்குறைவாக விமர்சனம் செய்த நிகழ்வும் அரங்கேறியது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமே.
அவ்வேளையிலும் கூட சூர்யா சூரரை போற்று படத்தின் மூலம் கிடைத்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை கொரோனா நிவாரண நிதியாக சினிமாவை சேர்ந்த சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி பெரிதும் உதவினார். இச்செயல் மிகவும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் பல பகுதிகள் 145 நாட்களாக உணவு வழங்கி பசிப்பிணி போக்கியுள்ளது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது தொடங்கிய இந்த சேவை அண்மையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் நிறைவு செய்யப்பட்டது.

Leave A Comment
You must be logged in to post a comment.