எம்ஜிஆர்-சிவாஜி படங்களின் நாயகி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தமன்னா?
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்பட பல நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த நடிகையின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எம்ஜிஆர் நடித்த தாய் மகளுக்கு கட்டிய தாலி, சிவாஜி கணேசன் நடித்த தெனாலிராமன், தங்கமலை ரகசியம், நிச்சயதாம்பூலம், மருத நாட்டு வீரன், ஜெமினி கணேசன் நடித்த ‘மிஸ்ஸியம்மா’ உள்பட பல படங்களில் நடித்தவர் ஜமுனா. இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ’தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற திரைப் படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாரிக்க தற்போது திட்டமிடப்பட்டு வருவதாகவும் இதில் ஜமுனாவின் கேரக்டரில் நடிக்க நடிகை தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சாவித்திரி உள்பட பல நடிகைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அந்த வரிசையில் ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.