நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான மகிசாசூரணை வதம் செய்ய ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை ஆயுத பூஜையாகவும், அதன் வெற்றியை கொண்டாட விஜய தசமி கொண்டாடப்படுகின்றது.

Ayutha poojai,sarashwathi poojai,vijaya thasami

முப்பெரும் தேவியர் ஒன்றாக சேர்ந்து அம்பிகையாகி ஒன்பது நாள் விரதம் இருந்து மகிசாசூரணை வதம் செய்ததை கொண்டாடும் நாள் தான் விஜய தசமி. அப்படி மகிசாசூரணை வதம் செய்வதற்கு முன்னர் அம்பிகை ஏந்தியுள்ள ஆயுதங்களுக்குச் சிறப்பு பூஜை செய்ததை கொண்டாடும் விதமாக நாம், ஆயுத பூஜை கொண்டாடி வருகின்றோம்.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு அணுவிலும் இறைவன் இருக்கின்றான் என்பார்கள். அந்த வகையில் நம் வாழ்க்கைக்கு மூலதனமாக இருக்கும் நம் தொழிலுக்குத் தேவையான பொருட்களை வைத்து அதை தெய்வமாக எண்ணி பூஜை செய்யும் நாள் தான் ஆயுத பூஜை தினம்.