இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் அண்மையில் வெளியான படம் – தமிழ்ப்படம் 2. கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்ப்படம் வசூல் ரீதியில் வெற்றியடைந்தது.

தமிழில் வெளியான பல்வேறு படங்களை விமர்சித்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இதே பாணியில் உருவான இப்படத்தின் 2-ஆம் பாகமான தமிழ்ப்படம் – 2 படத்திலும் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர்.

சுமார் 6 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் தயாரிப்பாளர்களுக்கு 10 கோடிக்கு வருவாய் கொடுத்தது. இந்நிலையில் தமிழ்ப்படம் படத்தை தயாரித்த துரைதயாநிதி, தன்னுடைய அனுமதி இல்லாமல் தமிழ்ப்படம் என்ற தலைப்பை பயன்படுத்தி இரண்டாம் பாகத்தை எடுத்திருப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்ப்படம்- 2 இதுவரை வசூலித்த தொகையை முடக்கும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.