ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் வரும் ஏப்ரல் 7ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த போட்டிகளைப் பொதுவாக போட்டி என்று சொல்லாமல் திருவிழா என்றுதான் சொல்வார்கள்.

இதற்கு முன் நடந்த ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா கோலாகலமாக நடந்தது. அனைத்து அணிகளின் தலைவர்களும் துவக்க நாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இந்த ஆண்டில் சென்னை, மும்பை அணிகளின் தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். மற்ற அணித் தலைவர்களை வரவழைப்பதை இந்த ஆண்டு நிறுத்திவிட்டார்கள்.
கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் உச்சநீதிமன்றம் நியமித்த குழுவினர் எடுத்த முடிவு இது என்கிறார்கள்.
இந்த ஆண்டு துவக்க விழாவில் நடிகை தமன்னா நடனமாட உள்ளார். அதற்காக அவருக்குப் பெரும் தொகை சம்பளமாகத் தரப்படுகிறது. ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் உடல்நிலை சரியில்லாததால் துவக்கவிழா நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார். இருந்தாலும் துவக்க நாளில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.



Leave A Comment
You must be logged in to post a comment.