தேசிய அளவில் டிரெண்டான அட்லி: விஜய் காரணமா?
இன்று காலை முதல் டுவிட்டரில் திடீரென அட்லியின் பெயர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த டிரெண்டுக்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
அட்லி இயக்கத்தில் விஜய் ஏற்கனவே ’தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய்யின் 66வது படத்தை அட்லீ தான் இயக்குவார் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பரவிவருகிறது. இதனால் தான் விஜய் ரசிகர்கள் அட்லியின் பெயரை இன்று காலை முதல் விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
தளபதி விஜய்யின் 65 வது படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் திடீரென விஜய்யின் 66வது படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ’மெர்சல்’ திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்ற போதிலும் அந்த படத்திற்கு பின்னர் தேனாண்டாள் பிலிம்ஸ் எந்த ஒரு படத்தையும் இன்னும் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் இந்த கூட்டணி அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதேபோல் ஷாருக்கான படத்தை இயக்குவதற்கு அட்லி தயாராகி வருவதாகவும், அந்த படத்தை முடித்து விட்டு மீண்டும் அவர் தமிழ் திரையுலகிற்கு திரும்ப இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும் என்றும் எனவே ’தளபதி 66’ படத்தை அட்லி இயக்குவாரா? என்பது கேள்விக்குறியே என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
மேலும் ‘தளபதி 66’ படத்தை லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், அஜய் ஞானமுத்து, வெற்றிமாறன், மகிழ் திருமேனி ஆகியோர்கள் பட்டியலில் உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவரை விஜய் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.