கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே சென்றது. இந்நிலையில் இந்த படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் ‘ஏ1’ படமும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடித்துள்ளார். மேலும், மொட்ட ராஜேந்திரன் , மனோகர் சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
Leave A Comment
You must be logged in to post a comment.