சினிமாவில் ஹீரோக்கள் மட்டும் தான் சாகசம் புரிவார்கள். அவர்கள் புரியும் சாகசத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்த்து ஹீரோயின்கள் அவர்களைக் காதலிக்க ஆரம்பிப்பார்கள்.

காலம் காலமாக இதுதான் தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது. நிஜத்தில் எந்த ஒரு பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத ஹீரோக்கள் திரையில் நடிக்கும் போது அநியாயத்திற்கு குரல் கொடுப்பார்கள். திரையில் அவர்கள் புரியும் சாகசங்களை நிஜ வாழ்க்கையில் தப்பித் தவறிக் கூட செய்ய மாட்டார்கள்.

ஆனால், திரையில் ஹீரோக்கள் டூப் வைத்து செய்யும் சாகசங்களை த்ரிஷா நிஜத்தில் டூப் இல்லாமல் செய்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். தற்போது கனடாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் த்ரிஷா அங்கு உயரத்தில் இருந்து பெல்ட் கட்டிக் கொண்டு கீழே குதிக்கும் ‘பங்கி’ ஜம்ப் சாகசத்தைச் செய்திருக்கிறார். அதன் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு ஹீரோக்களையும் சேர்த்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

த்ரிஷா ஆக்ஷ்னில் கலக்கியுள்ள ‘மோகினி’ படம் விரைவில் வெளியாக உள்ளது.