கடந்தாண்டு த்ரிஷா நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், இந்தாண்டில் அதிக படங்களில் நடித்த நடிகையாக அநேகமாக த்ரிஷா தான் இருப்பார் போல. அவர் நடித்த பல படங்கள் வரிசையாக ரிலீஸாக உள்ளன.

இந்நிலையில் அடுத்தப்படியாக “குற்றப்பயிற்சி” என்ற படத்தில் நடிக்கிறார். பாலாவிடம் உதவியாளராக இருந்த வர்ணிக் இப்படம் மூலம் இயக்குநராகிறார். த்ரிஷாவுடன் சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
1980-ம் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் த்ரிஷா, பெண் துப்பறிவாளராக நடிக்கிறார். இதுவரை த்ரிஷா நடித்திராத ஒரு வித்தியாசமான வேடம் இது.
ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி.விவேகானந்தன் தயாரிக்கிறார். ரதன் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.