‘வலிமை’ அப்டேட் தந்த மாவட்ட கலெக்டர்: வைரல் புகைப்படம்!
அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை அவரது ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதும் இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த படம் குறித்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த அறிவிப்புகளை தேர்தல் கமிஷனும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ’வலி’மை குறித்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டில் உள்ளது என்று குறிப்பிட்டு அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். இதுதான் ’வலி’மை அப்டேட் மக்களே என்று அவர் குறிப்பிட்டிருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.