சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சீமராஜா. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வரும் நிலையில், “வாரேன் வாரேன் சீமராஜா…” என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர். யுகபாரதியின் பாடல் வரிகள் எழுதியுள்ளார். திவாகர், கவிதா கோபி பாடியுள்ளனர்.
இந்தப்பாடலுக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாடல் வெளியான அரைமணிநேரத்தில் 1.25 லட்சம் பேர் யூ-டியூப்பில் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.



Leave A Comment
You must be logged in to post a comment.