2009ம் ஆண்டு வெளிவந்த படம் வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் இயக்குனராகவும், விஷ்ணு ஹீரோவாகவும் அறிமுகமான படம். தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது.

அற்புதம் சினிமா சார்பில் ஏ.பூங்காவனம், என்.ஆனந்த் தயாரிக்கிறார்கள். சுசீந்திரனின் மூலக்கதையை அடிப்படையாக கொண்டு செல்வசேகரன் இயக்குகிறார். வி.செல்வகணேஷ் இசை அமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
முதல் வெண்ணிலா கபடி குழுவிற்கு விஷ்ணு கேப்டனாக இருந்தார். அவரது அணியில் சூரி, அப்புக்குட்டி, உள்பட பலர் இருந்தார்கள். பயிற்சியாளராக கிஷோர் இருந்தார். இரண்டாம் பாகத்தில் கிஷோர் தான் பயிற்சியாளர் சூரியும், அப்புக்குட்டி உள்ளிட்ட சிலர் அப்படியே இருக்கிறார்கள். கேப்டன் மட்டும் விஷ்ணுவுக்கு பதில் விக்ராந்த். சரண்யா மோகனுக்கு பதில் அர்த்தனா பினு நடிக்கிறார். வில்லன் பசுபதி. இசை அமைப்பாளர் செல்வகணேசும், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியும் முதல் பாகத்தில் பணியாற்றியவர்கள்.
முதல் பாகத்தில் விஷ்ணு இறந்து விடுவதால் இரண்டாம் பாகத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதில் அவரது நண்பர் விக்ராந்த் களம் இறங்குவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.