விஜய் நடிப்பில் கடந்த வருட தீபாவளிக்கு வெளியான படம் பிகில். பாக்ஸ் ஆஃபிஸில் இப்படத்தின் வசூல் ரூ 300 கோடி என சொல்லப்பட்டு வந்தது. அட்லீ இயக்கத்தில் படமும் ஹிட்டானது.
அதே வேளையில் பிகில் படம் சில இடங்களில் நஷ்டம் என கே.ராஜன் என்பவர் கூறியிருந்தார். மேலும் அட்லீ பட்ஜெட்டை அதிகப்படுத்திவிட்டதாகவும் சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் அப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அலுவலகம், வீடுகள் ஆகிய இடங்களில் சென்னையில் நேற்று சோதனை செய்த போது கணக்கில் வராத ரூ 24 கோடி பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave A Comment
You must be logged in to post a comment.