‘எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா’: விஜய்சேதுபதி வெளியிட்ட போஸ்டர்!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ’எனக்கு இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் கொண்ட டிசர்ட்டுகளை பிரபல திரையுலக நட்சத்திரங்கள் அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது தான் அடங்கி உள்ள நிலையில் இன்று விஜய் சேதுபதி வெளியிட்ட திரைப்பட பர்ஸ்ட் லூக் போஸ்டர் ஒன்றில் ’எனக்கு ஹிந்தி தமிழ் தெலுங்கு எதுவுமே தெரியாது போடா’ என்ற வாசகம் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள அடுத்த படம் ’பேய்மாமா’. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்டரில் எனக்கு இந்தி தமிழ் தெலுங்கு எதுவுமே தெரியாது போடா என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். பன்னீர்செல்வம் ஒளிப்பதிவில், ராஜ் ஆர்யன் இசையில் ப்ரீதம் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதன் பல மாற்றங்களை சந்தித்து அவன் மாறினாலும் உல் உணர்வொன்று எப்போதும் மாறாது அப்படிப்பட்ட உல் உணர்வை தூண்டும் பாடல்கள் யுவன் இசையில் கேளுங்கள்
Leave A Comment
You must be logged in to post a comment.