கோப்ரா’ டீசர் தேதி அறிவிப்பு
சியான் விக்ரம் 8 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக ‘கோப்ரா’ படத்தின் அப்டேட்டுகளை விக்ரம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் இசையமைப்பாளரும் ஆஸ்கார் நாயகனுமான ஏஆர் ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வந்துள்ளது.
‘கோப்ரா’ படத்தின் டீசர் இம்மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீண்ட நாட்களாக அப்டேட் கேட்டுக்கொண்டிருந்த விக்ரம் ரசிகர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், ஸ்ரீநிதிஷிட்டி, மியா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Leave A Comment
You must be logged in to post a comment.