மகாபாரத கர்ணனை மையப்படுத்தி, ‘மஹாவீர் கர்ணா’ என்கிற படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ள இந்தப்படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். சுமார் 3௦௦ கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது.
இந்தப்படம் முதன்மையாக ஹிந்தியில் மட்டும் தயாராவதாக சொல்லப்பட்டது. தற்போது தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல படம் தயாரானதும், கர்ணா படத்தை 32 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம். உலகளவில் ரசிகர்களிடம் இப்படத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.