கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம் – ஹரி கூட்டணியில் வெளிவந்த பிளாக்பஸ்டர் படம் சாமி. 14 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் தயாராகி உள்ளது. விக்ரம், அப்பா – மகன் என இரண்டு ரோல்களில் நடித்திருக்கிறார்.

விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சூரி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரி இயக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வடிவில் வெளியிடப்பட்டது. 1.09 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் எல்லை சாமி போன்று விக்ரம் எல்லைக்கல்லில் அமர்ந்திருக்கிறார். திருநெல்வேலியிலிருந்து டில்லிக்கு கதை பயணமாகும் என தெரிகிறது. காரணம் எல்லை கல்லில் ஒருபுறம் திருநெல்வேலியும், மற்றொருபுறம் டில்லியும் உள்ளது. கிட்டத்தட்ட 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.
இதனிடையே இந்த மோசன் போஸ்டரில் மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தின் டிரைலர் இம்மாதம் 26-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.