யோகிபாபு நடிப்பில் உருவாகியிருக்கும் காக்டெயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
தமிழ்சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் யோகிபாபு. தனது காமெடியால் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வருகிறார். இதனால் கோலிவுட்டில் பலர் யோகிபாபுவை கதாநாயகனாக வைத்து படமெடுத்து வருகின்றனர். தர்ம பிரபு, கூர்க்கா உள்ளிட்ட படங்களில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார்.
இந்நிலையில் யோகிபாபுவின் அடுத்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. காக்டெயில் என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், யோகிபாபு முருகன் வேடத்தில் இருக்கிறார். காக்கட்டூ பறவையை வைத்து இந்தியாவில் உருவாகியிருக்கும் முதல் படம் இதுவாகும். ரா.விஜயமுருகன் இயக்கும் இத்திரைப்படத்தை பி.ஜி.மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Comment
You must be logged in to post a comment.