தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி யனாக வளர்ந்து நிற்பவர் யோகிபாபு. அஜீத்தின் விஸ்வாசம், விஜய்யின் 62வது படங்களில் நடிக்கும் அவர், நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவை ஒன்சைடாக காதலிப்பது போன்று யோகிபாபு ஒரு பாடலில் நடித்திருப்பது பெரிய அளவில் ரீச்சாகி உள்ளது.

 

 

இந்த நிலையில், குறும்பட இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க யோகிபாபுவிற்கு சிபாரிசு செய்துள்ளார் நயன்தாரா. அந்த அளவுக்கு கோலமாவு கோகிலா படத்தில் தனது நடிப்பினால் நயன்தாராவையே கவர்ந்து விட்டாராம் யோகிபாபு.