நடிகராக இருந்து இயக்குனராக மாறிய வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்று வெங்கட் பிரபுவையும் இயக்குனராக மாற்றியது.

அதற்குப் பிறகு அவர் இயக்கிய ‘கோவா’ படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அஜித்தை வைத்து இயக்கும் ‘மங்காத்தா’ படத்தை இயக்கி அந்தப் படத்தை வெற்றி பெற வைத்து அனைவரையும் வியக்க வைத்தார் வெங்கட் பிரபு. அடுத்து வெங்கட் பிரபு இயக்கிய ‘பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 இரண்டாம் பாகம்’ ஆகிய படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜாதான் இசையமைத்தார்.

வெங்கட்பிரபு தற்போது இயக்கி முடித்துள்ள ‘பார்ட்டி’ படத்திற்கு அவருடைய தம்பி பிரேம்ஜி இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெங்கட்பிரபு தயாரித்துள்ள ‘ஆர்கே நகர்’ படத்தின் இசை வெளியீட்டையும் அனிருத் தலைமையில்தான் வெங்கட்பிரபு நடத்தினார். அடுத்து அவர் சிம்புவை வைத்து இயக்க உள்ள படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவில்லையாம். ஏ.ஆர்.ரகுமான் அல்லது அனிருத் ஆகிய இருவரில் ஒருவர் இசையமைக்கலாம் என்கிறார்கள்.

சிம்பு நடிக்கும் படத்திற்கு அனிருத் இதுவரை இசையமைத்ததில்லை. சமீபத்தில் வெங்கட்பிரபு விழாவில் அனிருத் கலந்து கொண்டு சிறப்பித்ததும் ரசிகர்களால் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. ஆக, அதை வைத்துப் பார்த்தால் அடுத்து சிம்பு, அனிருத், வெங்கட்பிரபு கூட்டணி இணையவே வாய்ப்புகள் அதிகம்.ஏற்கெனவே, ‘பார்ட்டி’யில் பிரிந்த கூட்டணி, அடுத்தும் பிரிய இருப்பதால் யுவன், வெங்கட்பிரபு பிரிவு யதேச்சையானதா அல்லது பிரச்சினையானதா என்ற கேள்விகள் அடுத்து எழும்.