நடிகர் ஆர்யா எப்போதும் பிட்னெஸ் விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர். அவர் சமீபத்தில் சிக்ஸ் பேக் வைத்து மிகவும் பிரம்மாண்ட உடற்கட்டுடன் இருக்கும் புகைப்பததை ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்த தோற்றம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. பலரும் வியப்புடன் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று ஒரு புதிய ஒர்கவுட் வீடியோ வெளியிட்டு தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கும் பாக்சிங் படத்திற்காக தான் இவ்வளவு ஒர்கவுட் என அவர் கூறியுள்ளார்.