‘வலிமை’ அப்டேட்டை யாரிடம் அஜித் ரசிகர்கள் கேட்டார்கள் தெரியுமா?
தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வரும் பிப்ரவரி உடன் முடிந்து விடும் என்றும் இதனை அடுத்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கடந்த ஒரு வருடமாக படக்குழுவினர்களால் வெளியிடப்படவில்லை. விஜய் உள்பட ஒருசில மாஸ் நடிகர்களின் திரைப்படங்களின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். ஆனால் அஜித் ரசிகர்கள் மட்டும் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் கசியும் புகைப்படங்களை மட்டுமே வைரலாக்கி திருப்திப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் ‘வலிமை’ அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றனர் என்பதும் ஒருபடி மேலே போய் போஸ்டர் ஒட்டி கோரிக்கை விடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் சென்றபோது அங்கிருந்த அஜித் ரசிகர்கள் சிலர் ‘வலிமை’ அப்டேட் எப்போது சார் வரும்? என்று முதல்வரிடம் கேட்ட வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலானது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது அதற்கும் ஒருபடி மேலே சென்று உள்ள அஜித் ரசிகர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் முருகனை வழிபட்டு ‘வலிமை’ அப்டேட் கேட்டு முருகனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் முருகன், அஜித் கொண்ட போஸ்டர் ஒன்றை உருவாக்கி ‘வலிமை’ அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா’ என்று அதில் பதிவு செய்துள்ளனர்
வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கொஞ்சம் ஓவராகத்தான் ரியாக்சன் செய்கிறார்களோ என்று நெட்டிசன்கள் இந்த போஸ்டருக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்.
![Valimai Ajith Fans Murugan Temple Valimai Ajith Fans Murugan Temple](https://cdn.icowboysradio.com/cuckooradio/uploads/2021/01/valimai2212021m-1024x576.jpg)
Leave A Comment
You must be logged in to post a comment.