அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை‘ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதியும் விஜய் நடித்த ‘பிகில்‘ திரைப்படம் வரும் தீபாவளி தினத்திலும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த இரு படங்களின் புரமோஷன்கள் அடுத்தடுத்து வெளியாகி சமூக வலைத்தளங்களில் மாறி மாறி டிரெண்டாகி வருகின்றன.

Nerkonda Parvai

அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ‘தீ முகம் தான்’ என்ற சிங்கிள் பாடல் கடந்த 20ஆம் வெளியாகி அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்றது. இதனையடுத்து மூன்றே நாளில் அதாவது நேற்று விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடலான ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்தது.

ஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ‘தீ முகம் தான்’ என்ற சிங்கிள் பாடல் கடந்த 20ஆம் வெளியாகி அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்றது. இதனையடுத்து மூன்றே நாளில் அதாவது நேற்று விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடலான ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த நிலையில் அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் அடுத்த பாடலான ‘அகலாதே’ என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் அஜித் மற்றும் வித்யாபாலன் நடித்துள்ளனர். இதனையடுத்து இன்னும் ஓரிரு நாளில் ‘பிகில்’ குறித்த அடுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nerkonda parvai