அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த பிரபல நடிகர்

தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை போன்ற படங்கள் மூலம் தன் திறமையை வெளிக்காட்டியவர் இயக்குனர் வினோத்.

இப்படங்களின் மூலம் பலரை ஈர்த்த வினோத் அஜித் மனதிலும் இடம் பிடித்துள்ளார். அதாவது வினோத்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்தார் அஜித்.

அந்த படத்தில் பணிபுரிந்தது பிடித்துபோக தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் வினோத்திற்கே கொடுத்துள்ளார்.

வலிமை என்று அந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளனர், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நின்ற நிலையில் விரைவில் தொடங்க இருக்கிறது.

இப்போது என்ன தகவல் என்றால் காமெடி நடிகர் யோகி பாபு இப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இந்த தகவலை யோகி பாபு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.