அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு.

Amazon Forest

அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.

amazon-forest-carbon-dioxide

ஆக்சிஜன்
உலகின் மொத்த ஆக்சிஜன் தயாரிப்பில் 20% அமேசான் மழைக்காடுகளில் இருக்கும் மரங்களின் மூலமாக தான் வெளிவருகிறது.

Amazon Forest

தலைகீழ்

முன்னொரு காலத்தில், இப்போது ஓடிக் கொண்டிருக்கும் திசைக்கு நேர் மாறாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்ததாம் அமேசான் நதி.

உலகில் பாதி

உலகில் உள்ள மழைக்காடுகளில் பாதி அளவுக்கு மேல் அமேசான் மழைக் காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

amazon-rainforest

கண்ணீர் குடிக்கும் பூச்சி

அமேசானிய வண்ணத்துப்பூச்சிகள் ஆமைகளின் கண்ணீரை குடிக்கின்ற பழக்கம் கொண்டிருக்கின்றன.

amazon Butterfly

அமேசான் நதிக்கு கீழே ஓர் நதி

பிரேசிலில் அமேசான் நதிக்கு கீழே ஒரு நதி நான்கு கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில், இது நூறுமடங்கு அகலமானது என கூறப்படுகிறது.

அமேசானுக்கு உதவிய நார்வே

கடந்த 2008-ம் ஆண்டு நார்வே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை, அமேசான் மழைக் காடுகளை பாதுகாக்க கொடுத்தது.

நீர் வெளியேற்றம்

உலகின் மற்ற நதிகளை விட ஐந்து மடங்கு அதிகமான அளவு நீரை வெளியேற்றுகிறது அமேசான் நதி.

பெரிய நகர்

பெருவில் இருக்கும் இக்விடோஸ் தான் உலகிலேயே பெரிய நகரம். சாலைகளால் இந்த நகரை தொடர்பு கொள்வது இயலாத காரியம். இது அடர்ந்த அமேசான் மழைக் காட்டுக்குள் இருக்கிறது. இங்கு நான்கு லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

பாலம் இல்லை

அமேசான் நதிக்கு இடையே ஒரு பாலம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரினங்கள்

2.5 மில்லியன் பூச்சியினங்கள், 10,000-க்கும் அதிகமான தாவர வகைகள், ஏறத்தாழ 2000-க்கும் மேற்பட்ட பறவை வகைகள் மற்றும் பாலூட்டிகளுக்கு அமேசான் மழைக் காடுகள் தான் தாயகமாக விளங்குகிறது.

பறவைகள்

உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வசிக்கின்றன.

anaconda