தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்த நிலையில் அதற்குள் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி மிகப்பெரிய தொகை ஒன்றுக்கு பெற்றுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சேட்டிலைட் உரிமையின் வியாபாரமும் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

’தளபதி 64’ படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் இதுவரை இல்லாத மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.