தமிழ் திரைப்பட இயக்குனரின் காதல் வலையில் வீழ்ந்தாரா அனு இமானுவேல்?

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவரை நடிகை அனு இமானுவேல் காதலிப்பதாக வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ’துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அனு இமானுவேல் அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழில் ’எனக்கு 20 உனக்கு 18’ ’கேடி’ உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கியவரும், தற்போது தெலுங்கில் பிசியான இயக்குனராக இருந்து வரும் ஜோதி கிருஷ்ணா என்பவரின் காதலில் அனு இமானுவேல் விழுந்துள்ளதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசு பரவி வருகிறது. இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இயக்கிய ’ஆக்சிஜன்’ என்ற படத்தில் நடித்தபோது தான் இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் சகோதரர் ரவி கிருஷ்ணா என்பவரும் ஒரு நடிகர் என்பதும் ஜோதி கிருஷ்ணா மற்றும் ரவி கிருஷ்ணா ஆகிய இருவரும் பிரபல தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களின் மகன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

அனு இமானுவேல் மற்றும் ஜோதிகிருஷ்ணா ஆகிய இருவரும் தற்போது டேட்டிங்கில் இருந்து வருவதாகவும் மிக விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Anu Emmanuel Photo Gallery - Check out Anu Emmanuel latest images, HD stills and download recent movie posters, shooting spot photos

Actress Nithya Menen PhotoShoot Video