எஸ்.பி.பி வைத்து நிகழ்ச்சி நடத்த இருந்த ஏ.ஆர். ரகுமான்

கடந்த செப்டம்பர் 25ம் தேதி இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு துக்கமான நாள்.

காரணம் இசையின் மூலம் நம்மை நிம்மதி அடைய வைத்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

இந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வரவில்லை என்றே கூறலாம்.

அவருடன் அதிகம் பயணித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஒரு பிளான் பற்றி கூறியுள்ளார்.

அதாவது எஸ்.பி.பி யை வைத்து ஒரு முழு நிகழ்ச்சி நடத்த ரகுமான் பிளான் செய்தாராம்.

ஆனால் இப்போது அது நடக்காமலேயே போய்விட்டது என மனம் வருந்தி கூறியுள்ளார்.

ரகுமான் இந்த விஷயம் சொன்னதும் ரசிகர்கள் எஸ்.பி.பி வைத்து இப்படி ஒரு இசை கச்சேரி கேட்கமுடியாமல் போனதே அதற்குள் அவர் நம்மை பிரிந்துவிட்டாரே என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.