ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடும் தனுஷ்

தனுஷ் நடித்த ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த   படங்களின் ரிலீஸ் தேதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’அட்ராங்கே’என்ற ஹிந்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷுடன் அக்சயகுமார், சாரா அலிகான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசை அமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாட இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து தனுஷூம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னர் தனுஷ் பல திரைப்படங்களில் பாடியிருந்தாலும் இசைப்புயல் இசையில் முதன்முதலாக பாட இருப்பது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush AR Rahman Music

Dhanush Ramkumar Next Movie Update | Aranmanai 3 | Sundar.C | Aarya