தனுஷ் நடித்த அசுரன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது. தற்போதும் உள்ள ஜாதி பாகுபாடு மனநிலைக்கு எதிராக இந்த படம் பதிவு செய்துள்ள கருத்துக்கு பாராட்டுகளும் குவிந்துவ்ருகிறது.

Asuran,story,vekkai poomani

பூமணி எழுதிய வெக்கை நாவலின் தழுவல் தான் இந்த படம். இந்த படத்தை பார்த்துவிட்டு அவர் அளித்துள்ள பேட்டியில் சில ஆச்சர்யமான விஷயங்களை கூறியுள்ளார்.

“நான் ஒரு குறிப்பிட ஜாதிக்கு எதிராகவோ, அல்லது ஆதரவாகவோ இந்த கதை எழுதவில்லை. என் நாவலை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும், அந்த கதையில் ஜாதி பற்றி அதிகம் இருக்காது. சிதம்பரம் சொல்வது போல எழுதப்பட்ட அந்த கதையில், அந்த வயதில் ஜாதி பற்றிய தெளிவு அவரிடம் இருக்காது. தனுஷுக்காக கதையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார் வெற்றிமாறன்.”

“தனுஷ் ஊர் மக்கள் காலில் விழும் சீன் என கதையில் இருக்காது. அவர் கதாபாத்திரம் மீது மற்றவர்களுக்கு பரிதாபம் ஏற்படவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு சீனை சேர்த்துள்ளார்” என பூமணி தெரிவித்துள்ளார்.

கமர்சியல் காரணங்களுக்காக என் கதையின் சாராம்சமே dilute ஆக செய்துவிட்டார் இயக்குனர் எனவும் பேசியுள்ளார் அவர்.