அஸ்வினுக்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் பிரபலத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதோடு யூடியூபிலும் கலக்குறீங்க என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளர் அஸ்வின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து அவருக்கு சக கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’அஸ்வின் பிரதர் அவர்களுக்கு எனது இதயபூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நீங்கள் அதிக விக்கெட்டுகளை எடுத்து, டாப் விக்கெட்டுக்கள் எடுத்தவரின் பட்டியலில் இணைய எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி யூடியூபிலும் கலக்கிக் கொண்டு இருக்கீங்க அதுக்கும் வாழ்த்துக்கள் பிரதர் என்று கூறியுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடிய அஸ்வின், இந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாட உள்ளார் என்பதும் டெல்லி அணி கோப்பையை கைப்பற்ற அவரது பங்கு பெரும் பங்காக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan Aswin,Aswin Sivakarthikeyan,Siva