பாலாவின் ‘வர்மா’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் திரைப்படம் ’வர்மா’. இந்த திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருந்த நேரத்தில் திடீரென இந்த படத்தை ரிலீஸ் செய்ய போவதில்லை என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அதன் பின்னர் அதே படத்தை மீண்டும் கிரிசய்யா இயக்கத்தில் ’ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, அந்தப் படம் கடந்த ஆண்டு நவம்பரில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் ஓடிடியில் விரைவில் ரிலீஸ் ஆகும் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. அந்த செய்தி வதந்தி என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது ‘வர்மா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Athithya Varma,Athithya,Bala Direction

பாலாவின் ‘வர்மா’ திரைப்படம் அக்டோபர் 6ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் படமான இந்த படத்தின் பாலாவின் வெர்ஷன் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.