நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம் காரணம் என்ன ?
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி செம்ம பேமஸ். அதில் கொடிக்கட்டி பறந்தவர் வடிவேலு பாலாஜி.
இவர் உடல் நலக்குறைவால் தற்போது இறந்துள்ளார், இந்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் காமெடி விருந்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
42 வயதான இவர் வடிவேலு ஸ்டைலில் காமெடிகள் செய்வதில் வல்லவர். பலரின் பாராட்டுகளுடன் நிகழ்ச்சிகள் நடித்து வந்தவர் திடீர் உயிரிழந்துள்ளார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
வடிவேலு பாலாஜி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு சினி உலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.