தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவந்த படம் பிகில். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அது மட்டுமின்றி விஜய் திரைப்பயணத்திலேயே அதிகம் வசூல் செய்த படம் என்றால் பிகில் தான், ஆம், உலகம் முழுவதும் இப்படம் தற்போது ரூ 300 கோடியை நெருங்கவுள்ளது.

இதுநாள் வரை பிகில் ரூ 297 கோடி வசூல் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து கடந்த வாரம் ரிலிஸ் ஆன படங்களும் பெரியளவில் வசூல் வராததால், பிகில் ரூ 3 கோடி மட்டுமே வசூல் செய்தால் போதும் ரூ 300 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என கூறப்படுகின்றது.

அட்லீ  பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்குகிறார் என செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

இன்னும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் தற்போது பாலிவுட் மீடியாவில் இந்த படம் பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஷூட்டிங் அடுத்த வருடம் மார்ச் மாதம் தான் துவங்குகிறது என அதில் குறிப்பிட்டுள்ளனர்.