தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

bigil,thiruppur subramaniyam

அப்படியிருக்க பிகில் படத்திற்கு தமிழகம் தாண்டி, கேரளா, கர்நாடகா மற்றும் வெளி நாடுகளில் கூட மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் பிகில் தற்போது வரை 60 ஆயிரம் டாலர் முன்பதிவு நடந்துள்ளதாம், இவை இந்திய மதிப்பில் ரூ 42 லட்சத்திற்கு மேல்.

மேலும், விஸ்வாசம் அமெரிக்க ப்ரீமியரிலேயே 57 ஆயிரம் டாலர் தான் வந்து குறிப்பிடத்தக்கது, எப்படியும் பிகிலும் விஜய்யின் மெர்சல், சர்கார் போல் 1 மில்லியன் டாலரின் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர், அப்படியிருக்க பிகில் படம் உலகம் முழுவதும் பிரமாண்ட தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் பிகில் படம் ரூ 83 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதை நாமே தெரிவித்து இருந்தோம்.

தற்போது பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணி பிகில் தமிழகத்தில் மட்டுமே ரூ 200 கோடி வசூல் செய்தாக வேண்டும்.

அப்போது தான் ரூ 150 கோடி நெட் வந்து, வரி அனைத்தும் போக எல்லோருக்குமான லாபமான படமாக அமையும் என கூறியுள்ளார்.