சந்திரயான்-2 என்பது சந்திரயான்-1 இற்குப் பின்னர் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும்.

India Chndrayan 2

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம்,ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019 சூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டதுஇவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுலவி (ஆய்வுக் கலன்) ஆகியன உள்ளடங்கியுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன.

2019 செப்டம்பர் 7 இல் நிலாவில் நிலநேர்க்கோட்டின் கிட்டத்தட்ட 70° தெற்கே மன்சீனசு சி, சிம்பேலியசு என் ஆகிய இரு குழிகளிடையேயுள்ள மேட்டுச்சமவெளியில் சந்திரயான்-2 இன் தரையிறங்கியும், உலாவியும் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்லுகளுடனான உலாவி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளும். இது தான் திரட்டிய தரவுகளை சுற்றுக்கலன் மற்றும் தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்பும். சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும்.

Chandrayan 2 India

சந்திரயான் திட்டங்கள்

நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் என்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. ரஷிய நாட்டின் உதவியோடு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன்படி, சந்திரயான் -1 திட்டத்தின் கீழ், ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. அதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள் சார்பிலான கருவிகளும் இடம் பெற்றன. அதன் மூலமாக, ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.

சந்திரயான்-1 செயற்கைகோளில் இருந்த சூரிய சக்தி கருவி பழுதடைந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 100 கி.மீட்டருக்கு பதில் 200 கி.மீ. உயரத்தில் சந்திரயான் -1 சுற்றிக் கொண்டிருந்தது. எனினும் 95 சதவீத பணிகளை அது முடித்து விட்டதாக `இஸ்ரோதெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சந்திரயான் 2 திட்டத்துக்கான செயற்கை கோளை தயாரிக்கும் பணிகள் முடிந்தன.

இப்பணித்திட்டங்களின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.

Chandrayaan-2 India

என்னென்ன கருவிகள்

சந்திரயான்-2 திட்டத்தின் படி ஒரு செயற்கைகோள், அதை விண்ணில் எடுத்துச் செல்வதற்கான ஏவூர்தி (ஆர்பிட்டல் பிளைட் வெகிகிள்), நிலவில் தரையிறங்கி சோதனை நடத்துவதற்காக லேண்ட் ரோவர் கருவி ஆகியவை தயாரிக்கப்பட்டன. இது தவிர செயற்கை கோளில் பிற நாடுகளின் சார்பாகவும் கருவிகள் அனுப்ப திட்டமிடப்பட்டது. அது தொடர்பாக வெளிநாடுகளிடம் அறிவிப்பு செய்யப்பட்டது. அந்த நாடுகளின் கருவிகளை சுமந்து செல்வதற்காக, இஸ்ரோவுக்கு அவை கட்டணம் செலுத்த வேண்டும்.

தொழில்நுட்பக் கோளாறுகளால் சந்திராயன்-2 ஏவுதலில் ஏற்பட்ட தாமதம்

சந்திராயன்-2, 2019 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலம் ஏவப்பட 56 நிமிடங்கள் இருந்த போது, சந்திராயன்-2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சந்திராயனை ஏவும் ஏவுதளக் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இவ்வாறு நிகழ்ந்தது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்ப்பட்டு விட்டதாகவும், சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அறிவிக்கப்பட்டது.

சந்திராயன்-2 ஏவுதல்

சந்திராயன்-2 சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்குச் சரியாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2019, செப்டம்பர் 8 ஆம் நாள் நிலவின் தென்துருவத்தில் இறங்கும் என விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது.