பம்பாயில் சினிமா அறிமுகம்
இந்தியாவில் 1896-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி திரைப்படம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

bombai old movie

லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்ற நிறுவனம் மும்பையில் (அப்போது பம்பாய்) இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது.

அன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்றில் இது பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது. 1897-ம் ஆண்டளவில் பம்பாயில் கிளிப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு திரைப்பட கலையகத்தில் தினமும் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.