முருகதாஸ்-ரஜினி கூட்டணியில் முதன்முதலாக தயாரான படம் தர்பார். இப்படத்தில் ரஜினி அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கியுள்ளார்.

70 வயதானவர் நடிப்பது போலவே இல்லை என படம் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். படத்தின் வசூலும் எந்த ஒரு குறையும் இல்லாமல் அதிகம் வசூலிக்கும் என்கின்றனர்.

பொங்கல் விடுமுறை வேறு வருகிறது, பலருக்கும் படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் அரிய அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

சரி உலகம் முழுவதும் படம் எவ்வளவு வசூல் என்ற விவரங்கள் இதோ,

  • சென்னை- ரூ. 2.27 கோடி
  • USA- $615K
  • நியூசிலாந்து- $16,500
  • ஆஸ்திரேலியா- $160,000
  • ஹைதராபாத்- ரூ. 12.05 லட்சம்

சில இடங்களின் விவரங்கள் மட்டுமே வந்துள்ள நிலையில் சினிமா டிராக்கர்கள் மத்தியில் படம் ரூ. 55 கோடிக்கு மேல் முதல் நாளில் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.