‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் குறித்து தனுஷின் டுவீட்!

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக செய்திகள் இணைய தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இருவருமே இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவது தியேட்டரா? அல்லது ஓடிடியா? என தயாரிப்பு தரப்பு இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளன. இந்த நிலையில் சற்று முன்னர் தனது டுவிட்டரில் ’ஜகமே தந்திரம்’ ரிலீஸ் குறித்து தனுஷ் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருப்பதைப் போலவே நானும் திரையரங்கில் தான் வெளியேற வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். நமது நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார்

இந்த பதிவை அடுத்து ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

dhanish-tweet-about-jagame-thandhiram-movie-release

Actress Shruti Haasan PhotoShoot Video