ரஜினிக்கு கூட கிடைக்காத இண்ட்ரோ: ‘கர்ணன்’ படம் குறித்து தயாரிப்பாளர் பெருமிதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கூட கிடைக்காத மாஸ் அறிமுக காட்சி ‘கர்ணன்’ படத்தில் தனுசுக்கு கிடைத்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இந்த படம் ஏப்ரல் 6ஆம் ரிலீஸாக உள்ள நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தயாரிப்பாளர் கலைப்பு எஸ்.தாணு, இந்த படத்தை தான் பார்த்து விட்டதாகவும் இந்த படத்தில் தனுஷின் அறிமுக காட்சி என்னை அதிர வைத்தது என்றும், இதுவரை ரஜினிக்கு கூட இப்படி ஒரு அறிமுக காட்சி கிடைக்கவில்லை என்றும் மாரி செல்வராஜ் அந்த அளவிற்கு அந்த காட்சியை படமாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சமீபத்தில் வெளியான சந்தோஷ் நாராயணன் இசையில் மாரியம்மாள் பாடிய ’கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டாகி நிலையில் ‘கர்ணன்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Rakul Preet Singh PhotoShoot Video