பட்டாஸ் படம் தனுஷ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை தான் பெற்று வருகின்றது.

அப்படியிருக்க பட்டாஸ் படம் தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, அதிலும், தென் மாவட்டங்களில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது 3 நாள் முடிவில் பட்டாஸ் படம் ரூ 17 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், தர்பார் போன்ற பெரிய படம் ஓடியும், இப்படி ஒரு வசூல் வருவது அனைவருக்கும் மிகப்பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

கண்டிப்பாக அடுத்த வாரத்திற்குள் இந்த இரண்டு படங்களுமே போட்ட பணத்தை எடுத்துவிடும் என கூறப்படுகின்றது.