நடிகர் தனுஷ் அண்மையில் தான் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சுருளி படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராக் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற அவர் அண்மையில் வெளியான தர்பார் படத்தையும் பார்த்தார். அசுரன் 100 வது நாள் விழாவிலும் கலந்துகொண்டார்.

அடுத்ததாக அவர் ராட்சஸன் படத்தின் இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ராஜா தி ஜோர்னி என பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.