மக்களை மகிழ்விக்கும் வகையில் பல விஷயங்கள் உள்ளது. அதில் ஒன்று இசை என்றே கூறலாம்.

அதை காலத்திற்கு ஏற்ப, மக்களின் ரசனையை புரிந்துகொண்டு தானும் அப்டேட் ஆகி ஹிட் பாடல்களை கொடுப்பவர் ஏ.ஆர். ரகுமான்.

இவரது இசை, பாடல் பற்றி எல்லாம் பேச நாமெல்லாம் அவ்வளவு பெரிய மேதை கிடையாது. ஆஸ்கர் விருதுகளை வாங்கியும் தான் இன்னும் மாணவன் தான் என்பது போல் எப்போதும் அமைதியாக இருக்கும் ஒரு மனிதர்.

உலகமே கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு இன்று 53வது பிறந்தநாள். காலை முதல் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இன்று எத்தனையோ கோடி சம்பளம் வாங்கும் இவர் சிறுவயதில் ரெக்கார்ட் ப்ளேயரை இயக்கியதற்காக ரூ. 50 முதல் சம்பளமாகப் வாங்கியுள்ளார்.

பின் அவரது இசையில் வந்த முதல் படமான ரோஜாவுக்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 25,000 ஆயிரம்.

இவர் இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து சாதனை படைக்க அவரது பிறந்தநாளான இன்று சினிஉலகம் அவருக்கு வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறது.