44 வருடங்களாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்து வரும் இவர், இதுவரை 167 படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

 தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், இந்திய சினிமா ரசிகர்களை தனது ஸ்டைலால் கவர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பெங்களூருவில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய இவர் 1975-ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் பாலச்சந்தரின் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தனது கலை பயனத்தைத் தொடங்கினார். அந்தப் படத்தில் ரஜினியின் அறிமுகமே ரஜினி ஒரு கேட்டை திறப்பது போல் இருக்கும். அப்போது திறந்த கதவு தான், அவரை இன்னும் இன்னும் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறது. பெங்களூருவில் இருந்து சிவாஜி ராவாக தமிழ் நாட்டிற்கு வந்த அவரை ரஜினியாக மாற்றினார் இயக்குநர் பாலச்சந்தர். ஆரம்பத்தில் நடிகர் கமல் ஹாசன் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், பின்னர் ஹீரோவாக களம் இறங்கி, இன்று பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார். 44 வருடங்களாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்து வரும் இவர், இதுவரை 167 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். 168-வது படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டிருக்கிறது.