சிவகார்த்திகேயன் அடுத்த பட பூஜை: 45 நாட்களில் முடிக்க திட்டம்!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ’டான்’ படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க இருக்கும் ’டான்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, காளி வெங்கட், முனிஸ்காந்த், ஆர்ஜே விஜய் உள்பட பலர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தை 45 முதல் 50 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர் என்பதும் அதன் பிறகு இரண்டு மாதங்களில் தொழில்நுட்ப பணிகளை முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதியில் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

sivakarthikeyan-don-movie-pooja-today-at-chennai

Actress Vijayalakshmi PhotoShoot Video